உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகதுருகம் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்

தியாகதுருகம் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்

தியாகதுருகம்: தியாகதுருகம் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு உற்சவம் நடந்தது.

தியாகதுருவத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு திவ்ய பொருட்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்து ஆராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து நடந்த மங்கள ஆரத்தியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நடுத்தெரு, பாப்பாங்குளத் தெரு, துளுவவேளாளர் சமூகத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !