புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED :1116 days ago
தேவகோட்டை: புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோதண்டராமர் ஸ்வாமி கோவிலில் மூலவர்கள் ஸ்ரீ கோதண்டராமர், சீதை, லட்சுமணன் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. உற்சவர்களா ராமர் சீதை சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபால சன்னதியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை ஆறு மணி முதலே பக்தர்கள் நீண்ட க்யூ வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ரங்கநாத பெருமாள் கோவிலில் ரெங்கநாத பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து பெருமாளுக்கு திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மற்றும் நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில் மற்ற கோவில்களில் உள்ள பெருமாள் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தன.