பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை
ADDED :1168 days ago
பழநி: பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது.
பழநி, மேற்கு ரதவீதி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம், அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், காந்தி ரோடு, வேணுகோபால சுவாமி கோவில், ராமநாத நகரில் உள்ள காரிய சித்தி லட்சுமி நரசிம்மர் கோயில், உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்ட பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.