மகாளைய அமாவாசை: நடராஜர் கோவிலில் குளத்தில் தர்ப்பணம்
ADDED :1204 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு நுாற்றுணுக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கோவில் சிவகங்கை குளத்தில் நேற்ற அதிகாலை முதலே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க பொதுமக்கள் குவிந்தனர். குளத்தின் கரைகளில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு, பின்னர் புனிநீராடி தர்ப்பணம் வழங்கினர். இதனால் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.