உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டி கோயில்களில் மகாளய அமாவாசை வழிபாடு

ஆண்டிபட்டி கோயில்களில் மகாளய அமாவாசை வழிபாடு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதி கோயில்களில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாவூற்று வேலைப்பர் கோயில் நடந்த விழாவில் கோயில் வளாகத்தில் உள்ள சுனையில் பக்தர்கள் நீராடினர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

ஜம்புப்லிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடுகள் நடந்தது. கதலி நரசிங்கப்பெருமாள், செங்கமலத்தாயார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் ஆராதனைகள் சிறப்பு அலங்காரங்கள் செய்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !