அலங்காநல்லூர் அமாவாசை சிறப்பு வழிபாடு
ADDED :1207 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் கோயில் உள்ளது. புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. அம்மன், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கார வழிபாடு செய்தனர். அர்ச்சகர் வாசுதேவன் சிறப்பு பூஜைகள் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி தனம் அம்மாள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.