/
கோயில்கள் செய்திகள் / புரட்டாசி மகாளய அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
புரட்டாசி மகாளய அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
ADDED :1310 days ago
ராமேஸ்வரம்: புரட்டாசி மகாளய அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
நேற்று மகாளய அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரசு பஸ், ரயில், ஏராளமான வாகனங்களில் ராமேஸ்வரம் வந்திறங்கினர். இவர்கள் தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருக்கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் சிவ சிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். இதனைதொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.