காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
ADDED :1122 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், நவராத்திரி உற்சவம் துவங்கியது. கோவை மாவட்டத்தில் வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி உற்சவம் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம், 26ம் தேதி இரவு துவங்கியது. ரங்கநாயகி தாயாருக்கு விஸ்வக்சேனர், ஆவாகனம், புன்னியா வசனம், கலச ஆவாகனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திவ்ய பிரபந்தத்தில் நீராட்டு பாசுரங்கள் சேமிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் உள்ளே வளம் வந்து, ஆஸ்தாணம் அடைந்தார். அங்கு திரு ஆராதனம், மந்திர புஷ்பம் ஆகிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு குதிரை வாகனத்திற்கு பூஜை செய்து கங்கணம் கட்டப்பட்டது. இவ்விழாவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், என, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.