வரசித்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி கொலு
ADDED :1200 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.
நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. சமீபத்தில், இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, நவராத்திரி விழாவையொட்டி, கொலு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தினசரி மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.