நன்மை தருவார் கோயில் நவராத்திரி விழா: தட்சணாமூர்த்தி அலங்காரத்தில் அம்மன்
ADDED :1446 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1432ம் பசலி நவராத்திரி உற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காம் நாளில் தட்சணாமூர்த்தி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.