திருப்பதி பிரம்மோற்சவம் : சிம்ம வாகனம் மலையப்பசுவாமி உலா
ADDED :1170 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு சிம்ம வாகனம் மலையப்பசுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.
திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதுமே விழாக்கள்தான் என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையானது தமிழகத்தில் நவராத்திரி என்ற பெயரில் நடைபெறும் விழாதான் திருமலையில் பிரம்மோற்சவ விழா என்ற பெயரில் நடைபெறுகிறது. மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவமூர்த்தியான மலையப்பசுவாமி காலையிலும் இரவிலும் விதவிதமான வாகனங்களில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மூன்றாம் நாளான நேற்று இரவு சிம்ம வாகனம் மலையப்பசுவாமி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.