உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தியில் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

காளஹஸ்தியில் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் நவராத்திரி விழா கடந்த ஐந்து நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி ஞானபிரசுனாம்பிகை தாயாரின் மூலவர் சன்னதி எதிரில் (நவராத்திரி விழாவையொட்டி) கொலு ஏற்பாடு செய்துள்ளனர்.


இது  கோயிலுக்கு வரும்  பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. நேற்று ஐந்தாவது நாள் என்பதால் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் ஞானப்பிரசுனாம்பிகை அம்மையார் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்திலும் (உற்சவமூர்த்தி) சிவன் கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன் லலிதா தேவி அலங்காரத்திலும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன பொன்னாலம்மன் ஸ்கந்த மாதா அலங்காரத்திலும் இதே போல் ஏழு கங்கை அம்மன்  கோயிலில் அம்மன் ஸ்கந்த மாதா அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன கனகாச்சலம் மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மன்  மலையில் மின்விளக்குகள் அலங்காரம் கண்கள் மிளிரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .அங்கு மலைமீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மனுக்கு கடந்த ஐந்து நாட்களாக நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.மேலும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மனுக்கு  மாவிளக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .இதே போல் ஸ்ரீ காளஹஸ்தி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் நவராத்திரி விழாவையொட்டி அனைத்து கோயில் களிலும் அம்மனுக்கு  சிறப்பு அலங்காரங்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !