உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி சிறப்பு ஹோமம்

பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி சிறப்பு ஹோமம்

விழுப்புரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நவராத்திரியையொட்டி சிறப்பு ஹோமம் நடைபெற்று வருகிறது.விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு அடுத்த பூவரசங்குப்பத்தில் தென் அகோபிலம் என அழைக்கப்படும் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 25ம் தேதி துவங்கியது.அன்று முதல் தினமும் காலை, மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, காலை, மாலை வேளையில் தினமும் ஸ்ரீசுத்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமங்கள் நடக்கிறது.தலைமை பட்டாச்சாரியர் பார்த்தசாரதி தலைமையில், 25க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியர்கள் ேஹாமத்தில் பங்கேற்கின்றனர்.ஹோமத்தில் லட்சக் கணக்கான பழங்கள், மூலிகைகள், 50 டன் சூப்பர் ருசி நெய் சேர்க்கப்பட்டு வருகிறது. வரும் 4ம் தேதி மாலை 6:00 மணியுடன் ஹோமம் நிறைவு பெறுகிறது.ஒன்பது நாட்களில் 1 லட்சம் மந்திரங்கள் பட்டாச்சாரியர்களால் படிக்கப்படுகிறது. ஹோமத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !