மலையரசன் கோயில் சிறப்பு வழிபாடு
ADDED :1179 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தெற்கு தெரு அருகில் உள்ள பழமையான மலையரசன் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. நித்தியானந்தா என்ற மலையரசன் சாமிக்கும், ஆஞ்சநேயர், குன்றின் மீது உள்ள வரதராஜ பெருமாளுக்கும் ஆராதனைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. மலையரசன் சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். N அன்னதானம் வழங்கப்பட்டது.