உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமியம்மனுக்கு வராகி அலங்காரம்

லட்சுமியம்மனுக்கு வராகி அலங்காரம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள லட்சுமியம்மன் கோவிலில், கடந்த, 26ம் தேதி, நவராத்திரி விழா துவங்கியது. மகேஷ்வரி, கவுமாரி, அன்னபூரணி என, லட்சுமி அம்மனுக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.விழாவின், 6ம் நாளான நேற்று முன்தினம் மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடித்து, வராகி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள், சங்கல்பம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. அதை தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம், பல்லக்கு சேவை ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !