ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம்!
ADDED :4853 days ago
வேலூர்: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில், பிராமணர் சங்கம், ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் சார்பில் மழை வேண்டி வருண ஜபம் நேற்று நடந்தது.கணேச சாஸ்திரிகள் தலைமையில், 16 பேர் கோவில் குளத்தில் இருந்த படி வருண ஜபம் செய்தனர். அப்போது, அவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீர் நிரப்பிய கேன்கள் கொண்டு வந்து கோவிலில் வைத்து அதில் உட்கார்ந்து வருண ஜபம் செய்தனர். தொடர்ந்து சங்கல்ப பூஜை, சோடச உபசார பூஜை, பஞ்சகவய்ய பூஜைகள் நடந்தது. வரும் 25ம் தேதி வரை தினம் காலை 7 மணி முதல் 11 வரை வருண ஜபம், மாலை 3.30 மணி முதல் 5. 30 வரை தேவ பாராயணம், இரவு 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு ருத்ர திரிதி அர்ச்சனை, அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு லலிதா திரிதி அர்ச்சனை நடக்கிறது.