உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்

பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்

உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழாவில் நாளை ரதோற்சம் நடக்கிறது.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. வரும் 7ம் தேதி வரை நடக்கும் இந்த பிரம்மோற்சவ விழாவில் தினசரி இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இன்று இரவு வேடுபரி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை(4ம் தேதி) காலை 7.30 மணியளவில் திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரதோற்சவம் நடக்கிறது. 5ம் தேதி பெருமாள் தேசிகர் திருவீதி புறப்பாடும், 6ம் தேதி விடையாற்றி உற்சவம், சாத்துமுறை நடக்கிறது. 7ம் தேதி நிகமாந்த மஹாதேசிகன் திருவீதியுலா புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !