திருப்புத்தூர் கோயில்களில் அக்.5ல் அம்பு எய்தல் விழா
ADDED :1114 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், பூமாயி அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா நிறைவை முன்னிட்டு அக்.5ல் அம்பு எய்தல் விழா நடைபெறும்.
திருப்புத்தூரில் சிவன், பெருமாள், பூமாயி அம்மன் கோயில்களில் நவராத்திரி உற்ஸவம் நடந்து வருகிறது. தினசரி உற்ஸவருக்கும், மூலவருக்கும் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. திருவிளக்கு பூஜைகளும் நடந்தன. திருத்தளிநாதர் கோயிலில் அக்.5ல் தேரோடும் வீதியில் அம்பு எய்தல் நடைபெறும். மாலை 6:00 மணி அளவில் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரனை அம்பு எய்வார். பூமாயி அம்மன் கோயில் அருகில் இரவு 8:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து அம்பு எய்தல் நடைபெறும்.