அன்பிற்பிரியாள் கோவிலில் நவராத்திரி விழா
ஈரோடு : சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் கோவிலில் 45 வதுவருட நவராத்திரி உற்சவ விழா நடைபெற்றது. ஸ்ரீவாணியர் பிள்ளையார் மற்றும் ஸ்ரீஅன்பிற்பிரியாள் அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த செப்.26ம்தேதி தொடங்கியது.தினந்தோறும் காலை 11மணியிலிருந்து அபிஷேகம்,அலங்கார தீபாராதனை,சமாராதனை,பிரசாதம் வழங்குதல்,என இரவு வரை நடைபெற்றது.ஒவ்வொரு நாளும், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீமீனாட்சியம்மன், ஸ்ரீகாமாட்சியம்மன், ஸ்ரீபண்ணாரியம்மன், ஸ்ரீவெங்கடாஜலபதி, ஆகிய மூலவர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.நேற்று அங்காளம்மன் அலங்காரத்தில் அன்பிற்பிரியாள் அம்மன் அருள்பாலித்தார்.தினந்தோறும் மதியம் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் தினந்தோறும் இரவு 8மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி ஏராளமானோர் கலந்து தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாணியர் சங்கதலைவர் கோபு,செயலாளர் பாபு,ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.