எங்கும் சரஸ்வதி
ADDED :1112 days ago
* ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு துர்க்கையை வழிபட்டுள்ளார்.
* ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் ‘நாமகள் இலம்பகம்’ என்னும் பகுதி உள்ளது.
* சப்தமாதர் என்னும் ஏழு பெண் தெய்வங்களில் சரஸ்வதியை ‘பிராம்மி’ என அழைப்பர்.
* குமரகுருபரர் பாடிய பாடலான ‘சகலகலாவல்லி மாலை’யில் சரஸ்வதியை போற்றியுள்ளார்.
* திபெத், நேபாளம், இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளில் சரஸ்வதி வழிபாடு உள்ளது.
* சரஸ்வதி, தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் ஞானம் கிடைக்கும். ஞானத்தின் அடையாளமாக இருவரும் கையில் ஸ்படிகமாலை வைத்திருப்பர்.
* ராமானுஜருக்கு சரஸ்வதியால் வழங்கப்பட்ட பட்டம் பாஷ்யக்காரர்.
* சரஸ்வதியை கிரேக்கர்கள் ‘அதீனே’ என்றும், ரோமானியர்கள் ‘மினர்வா’ என்றும் வழிபடுகின்றனர்.
* சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர்.