உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் திருப்பணிகள்; பாலாலய பூஜைகள் துவக்கம்

மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் திருப்பணிகள்; பாலாலய பூஜைகள் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ராஜகோபுரம், விமானம் கோயில் பிரகாரங்களில் புனரமைப்பு திருப்பணிகள் செய்யப்பட உள்ளது.

இதற்காக இன்று (அக்.5) காலை 7:00 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரக ஹோமமும், மாலை 4 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம் உட்பட சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. நாளை (அக்.6) காலை 7:45 மணிக்கு மேல் பாலாலய பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜவகர், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !