உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி பாரிவேட்டை: பக்தர்கள் உற்சாகம்

திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி பாரிவேட்டை: பக்தர்கள் உற்சாகம்

 திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில், திரிபுரசுந்தரி அம்மனுக்கு, செப்., 25 முதல், அக்., 3 வரை, நவராத்திரி உற்சவம் நடந்தது.மேலும், விஜயதசமியை முன்னிட்டு, அம்மன், பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்வு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, பக்தவத்சலேஸ்வரர் கோவிலிலிருந்து, நால்வர்கோவில் பகுதிக்கு, சந்திரசேகரருடன், திரிபுர சுந்தரி அம்மன் உலா சென்றார்.விநாயகர் கோவில் பகுதியில், மகிஷாசுரனை வதம் செய்வதாக, வன்னிமரத்தை வெட்டி, உற்சவம் கண்டார். பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !