உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகி அம்மன் கோவிலில் தங்க ரத புறப்பாடு

பெரியநாயகி அம்மன் கோவிலில் தங்க ரத புறப்பாடு

பழநி: பழநி மலை கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவிற்கு பின் மலைக்கோயில் தங்கரத புறப்பாடு நேற்று நடைபெற்றது

பழநி கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. நவராத்திரி விழாவில் 9 நாட்களும் மலைக்கோயிலில் நடைபெற்ற தங்கரத புறப்பாடு அக் 4., வரை இல்லை. நேற்று (அக்.5-) இரவு 7:00 மணிக்கு மலைக்  கோயிலில் தங்கரத புறப்பாடு துவங்கியது. 14 நிலைகளிலும் பக்தர்கள் திரளாக தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் தங்க ரதத்தில் எழுந்தருளிய சின்ன  குமாரசுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !