தணிகாசலம்மன் கோவிலில் பழங்களால் அலங்காரம்
ADDED :1178 days ago
திருத்தணி:திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலை, தணிகாசலம்மன் கோவிலில் நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா, கடந்த மாதம், 26ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து, தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு அலங்காரங்களில் மூலவர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று, விஜயதசமியையொட்டி மூலவருக்கு கலசாபிஷேகம் மற்றும், 108 பால்குட அபிஷேகம் நடந்தது.மேலும், கோவில் உட்பிரகாரத்தில் பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சில பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இன்று, வசந்த உற்சவம் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.