தசரா விழா: துர்க்கை சிலை ஊர்வலம்
ADDED :1129 days ago
தொண்டாமுத்தூர்: புதுப்பாளையத்தில், தசரா விழா நிறைவையொட்டி, துர்க்கை சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நொய்யல் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
இந்தியாவில், நவராத்திரி விழாவை, தசரா பண்டிகையாக பத்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில், பொதுமக்கள் சார்பில், நவராத்திரி விழாவின் துவக்க நாளான கடந்த செப்., 26ம் தேதி துர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. உப தெய்வங்களாக, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகர் ஆகிய சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாள்தோறும் காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்நிலையில், நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று, துர்க்கை சிலை, மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நொய்யல் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.