ஏலாக்குறிச்சியில் குத்துவிளக்கு பூஜை
ADDED :4806 days ago
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா கோயிலில், 120 அடி உயர ஜெபமாலை பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி ஆலய வளாகத்தில் நடந்த குத்துவிளக்கு பூஜையை, கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஏலாக்குறிச்சி பங்கு தந்தை லூர்துசாமி வரவேற்றார்.விழாவில் ஏலாக்குறிச்சி உதவி பங்கு தந்தை டெரன்ஸ், மைக்கேல்பட்டி ஜான் பன்னீர்செல்வம், கும்பகோணம் அடைக்கலசாமி, சூசை, புள்ளம்பாடி தங்கசாமி, கொரடாச்சேரி தன்ராஜ், வடகரை டோமினிக், திருமானூர் ஆரோக்கியசாமி, கூவத்தூர் வின்சென்ட், தஞ்சாவூர் பிரபாகரன், ஏலாக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.