ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா
ADDED :1350 days ago
திண்டிவனம்: திண்டிவனம் ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இக்கோவிலில், 27ம் ஆண்டு நவராத்திரி மகோற்சவத்தையொட்டி, கடந்த 26ம் தேதியிலிருந்து அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக, ஆராதனை நடந்தது. நவராத்திரி நிறைவு விழாவான நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.