அரங்கநாதபெருமாள் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
ADDED :1101 days ago
திட்டக்குடி: திட்டக்குடி வதிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. நவராத்திரி முடிந்து விஜயதசமியான நேற்றுமுன்தினம், அசுரனை அழிக்கும் அம்பு போடும் உற்சவம் நடந்தது. அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுமங்கலி பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது. பூஜைகளை வைணவசெம்மல் வரதசிங்காச்சாரியார், பட்டாச்சாரியார் ராகவன் செய்து வைத்தனர். இதேபோல் வைத்தியநாதசுவாமி கோவிலிலும் அம்புபோடும் உற்சவம் நடந்தது.