படைக்கலம் திருவிழா
ADDED :1163 days ago
அவிநாசி: படைக்கலம் திருவிழாவிற்காக தீர்த்தம் எடுத்துச் சென்ற பக்தர்கள். அவிநாசி அடுத்த புதுப்பாளையத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அழகர் பெருமாள் சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு படைக்கலம் திருவிழா இன்று நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பூசாரி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து சாமி இறங்குதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். படைக்கலம் திருவிழாவினை முன்னிட்டு விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகின்றது.