உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தத்தில் பிரதோஷ விழா

நத்தத்தில் பிரதோஷ விழா

நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழா பூஜைகள் நடந்தது.

விழாவையொட்டி நந்தி சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வயதின அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவில், சிறுமலை சிவசக்தி சித்தர் பீடத்தில் உள்ள சிவசக்தி அம்மனுக்கும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் விஸ்வநாதர் சன்னதி, கணவாய்ப்பட்டி பங்களா சிவன் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !