மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு
ADDED :1101 days ago
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சுவாமிக்கும்,நந்திக்கும் 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து வெள்ளியிலான உற்சவர் சுவாமிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் வளாகத்தை சுற்றி 3முறை வலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பிரதோஷக விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.