உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை.. கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை.. கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெ.நா.பாளையம்: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே அப்புலுபாளையத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நரசிம்மநாயக்கன்பாளையம் பழையூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், திருமலை நாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், சின்னதடாகம் பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !