பாதையை மறைத்து நெய் விளக்கு விற்பனை, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED :1102 days ago
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் வாசலை மறைத்து நெய் விளக்கு விற்பனை செய்வதால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் இது இரு மடங்காக அதிகரிக்கும், கோயிலின் கிழக்கு நுழைவுப்பாதையை மறைத்து நெய் விளக்கு விற்பனை நடைபெறுகிறது. அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் அப்பகுதி வழியாகத்தான் வந்து செல்கின்றனர். நெய்விளக்கில் இருந்து சிதறும் எண்ணையால் தினசரி பலரும் கீழே விழுந்து காயமடைகின்றனர். பக்தர்கள் பலமுறை புகார் கூறியும் பாதையை மறைத்து விற்பனையை தடுத்து நிறுத்தவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.