பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1171 days ago
பழநி: பழநி புரட்டாசி சதுர்த்தசி யை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
பழநி புரட்டாசி சதுர்த்தசியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர் சன்னதியில் மாலை 4:00 மணி முதல் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதில் பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்,சிவகாமி அம்மனுக்கு தீபாதாரனை நடைபெற்றது. அதன் பின் நடராஜர் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.