உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவ பெருமாள்11ல் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளல்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள்11ல் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளல்

ஸ்ரீபெரும்புதுார் : திருவள்ளூரில் இருந்து, வீரராகவப் பெருமாள் ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருளும் நிகழ்வு 11ம் தேதி நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. புரட்டாசி மாதம்  திருவோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகரின் அவதார தின விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும்.

இந்த விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஸ்ரீபெரும்புதுாரில் எழுந்தருள்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு வேதாந்த தேசிகரின் 754 வது அவதார தின விழாவை முன்னிட்டு  திருவள்ளூரில் இருந்து வீரராகவ பெருமாள் வரும் நாளை இரவு புறப்படுகிறார். நாளை மறுதினம் தேதி அதிகாலை ஸ்ரீபெரும்புதுார் எல்லைய வந்தடையும் வீரராகவ பெருமாளை வேதாந்த தேசிகர் ஊர்  எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு அழைப்பார். அதன் பின், ஸ்ரீபெரும்புதுார் வீதிகளில் புறப்பாடு நடைபெறும். பின் 11:00 மணிக்கு, வேதாந்த தேசிகர் கோவிலை சென்றடைவார். அங்கு,  மதியம், 1:00 மணிக்கு, வீரராகவப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். மறுநாள் வீரராகவப்பெருமாள் மீண்டும் திருவள்ளூர் திரும்புவார். ஸ்ரீபெரும்புதூரில் விஷேசமாக நடக்கும் இந்த  நிகழ்வு கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. தற்போது வீரராகவ பெருமாள் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருள உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !