திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய விழா!
ADDED :4853 days ago
திருவேடகம்: திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஆக. 31 ல் ஆவணி பவுர்ணமியன்று வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா நடக்கிறது. ஏழவார் குழலியம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஆவணிமூல உற்சவம் நேற்று முதல் துவங்கியது. ஆடி வீதியில் எழுந்தருளிய அம்மன், சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். ஆக.31 ல் பவுர்ணமியன்று மாலை 5 மணிக்கு மேல் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா நடக்கிறது. தமிழகத்தில் இங்கு மட்டும் இவ்விழா நடக்கிறது. அறங்காவலர் எஸ்.எல்.சேவுகன், நிர்வாக அதிகாரி சுமதி, ஊழியர் முத்துவேல் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.