உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணியம்மன் கோவில் தேர் திருவிழா

காணியம்மன் கோவில் தேர் திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே காணியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆவணி முதல் திங்கட்கிழமை துவங்கி சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் இருளப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி ஆகிய ஆறு பஞ்சாயத்து பொதுமக்கள் சேர்ந்து அம்மனுக்கு 20ம் தேதி பூ விடுதல் நிகழ்ச்சி துவங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், அம்மன் வீதி உலா வருதலும் நடந்தது.எம்.எல்.ஏ., அன்பழகன், யூனியன் சேர்மன் முருகன், துணை சேர்மன் ராஜேந்திரன், கோவில் அறங்காவலர்கள் சின்னப்ப கவுண்டர், மாரப்ப கவுண்டர், மணியரசு, சண்முகம், நாகராஜ் வடம் பிடித்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !