உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமனூரில் ஜோதிர் லிங்க தரிசனம் வரும்,16ம் தேதி வரை நடக்கிறது

சோமனூரில் ஜோதிர் லிங்க தரிசனம் வரும்,16ம் தேதி வரை நடக்கிறது

சோமனூர்: சோமனூரில், பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில், ஜோதிர் லிங்க தரிசன நிகழ்ச்சி துவங்கியது.

திருப்பூர் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள், ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், சோமனூர் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், 12 ஜோதிர் லிங்கங்கள் மற்றும் அமர்நாத் பனி லிங்க தரிசன நிகழ்ச்சி நேற்று முன் தினம் துவங்கியது. வரும், 16 ந் தேதி வரை நடக்கும் தரிசனத்துக்கு அனுமதி இலவசம். அமர்நாத் பனி லிங்கம், சோமநாதர், கேதாரநாதர், ராமேஸ்வரர் உள்ளிட்ட, 12 ஜோதிர் லிங்கங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தியானம் மற்றும் மன அமைத்திக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை பிரம்ம குமாரிகள் அமைப்பினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !