காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ADDED :1094 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப் பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கட ஹர சதுர்த்தியை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு தங்க தேரில் 4 மாட் வீதிகளில் ஊர்வலம் நடத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யா சாகர் ரெட்டி அதிகாரிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் காளஹஸ்தி சிவன் கோயிலிலும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி அஞ்சி விநாயகர் சன்னதியில் சிறப்பு ஹோம பூஜைகள் மகா தீபாராதனை நடைபெற்றது.