உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சேதமடைந்துள்ள சிமென்ட் சிலாப் கற்களால் பக்தர்கள் நீராட முடியாமல்அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். பக்தர்கள் கடலில் நீராட வசதியாக 2018ல் மத்திய சுற்றுலா நிதியில் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் கடற்கரையில் சிமென்ட் சிலாப் கற்கள் அமைத்து அழகுபடுத்தினர்.  ஆனால் இந்த சிமென்ட் சிலாப் கற்கள் ஓராண்டு கூட தாக்கு பிடிக்காமல்2019 வீசிய சூறைக்காற்றில் ஏற்பட்ட ராட்சத அலையில் சேதமடைந்து தீர்த்த கரை முழுவதும் அலங்கோலமாக கிடக்கிறது. இதன் வழியாக பக்தர்கள் அக்னி கடலில் இறங்கி நீராட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கற்களை அகற்றி இயற்கையான மணல் பரப்பை உருவாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !