கோயில்கள் வியாபார தலம் அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை
ADDED :1095 days ago
மதுரை: ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பெயர்களில் தனி நபர்கள் சிலர், சட்ட விரோதமாக துவக்கிய இணையதளத்தை முடக்க வேண்டும் எனக்கூறி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண அமர்வு பிறப்பித்த உத்தரவு: கோயில்கள் சிலருக்கானது அல்ல. பொது மக்களுக்கானது. கோயில்கள் வழிபாட்டுக்கான தலமே தவிர. வியாபார தலம் அல்ல. கோயில்களின் பெயரில் தனிநபர்கள் இணையதளம் மூலமாக லட்சகணக்கான பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை அக்.,26க்கு ஒத்திவைத்தனர்.