வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1095 days ago
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்திலும், உற்சவர் ஊஞ்சல் உற்சவத்திலும் அருள்பாலித்தனர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.