மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேக, வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலை வலக்காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, நேற்று இரவு 7:00 மணிக்கு மூலவர் சக்திவேல் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.