ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மெகா உளவார பணி
ADDED :1096 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் 400 பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் சேவா பாரதி மற்றும் சென்னை ஜெகத்குரு சேவாஸ் டிரஸ்ட் சேர்ந்த பக்தர்கள், தன்னார்வலர்கள் 400 பேர், ராமேஸ்வரம் கோயில் கோசாலை, வடக்கு நந்தவனம், சமையல் கோயில் பிரகாரங்களில் தேங்கி கிடந்த தண்ணீர், தூசிகள், முள்புதர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் நாளை (அக்.,15) கோயில் தீர்த்த கிணறுகள், குளங்கள் மற்றும் பக்தர்கள் நீராட செல்லும் வழித்தடத்தில் தேங்கி கிடக்கும் பாசி, கழிவுகளை அகற்றவும், 3ம் நாளாக (அக்.,16) ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை திருக்கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் நகர் சேவா பாரதி தலைவர் சுடலை, ஜெகத்குரு சேவா டிரஸ்ட் நிர்வாகி ராமஜெயம் செய்துள்ளனர்.