உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரங்கராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சீரங்கராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள சீரங்கராய பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

சிறுமுகை அடுத்த இலுப்பநத்தத்தில் ரங்கநாயகி சமேத சீரங்கராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வீரமாஸ்தியம்மன் கோவில் டிரஸ்ட் சார்பில், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவீதி உலா நடந்தது. இன்று புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை உற்சவ திருவிழா நடைபெறுகிறது. இன்று காலை, 7:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கங்கணம் கட்டுதல், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை மற்றும் கணபதி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தன. 10:00 மணிக்கு சுவாமி அழைப்பு நடந்தது. 11:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவ வைபவம் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சீரங்கராய பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். ராசடி ரகுநாதன் சுவாமிகள், விஜயகுமார் ரகுநாட் சுவாமிகள் முன்னிலையில், வெங்கட்ராமணய்யர் திருக்கல்யாண உற்சவ வைபவத்தை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு தன்னாசி சுவாமி, கருப்பராய சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு சுவாமி திருவீதி உலா, இலுப்பநத்தம், எஸ். புங்கம்பாளையம், திம்மனூர் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. நாளை புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அபிஷேக, அலங்கார பூஜை, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து கவாள பூஜை முடிந்த பின்பு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர், நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !