உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதன்புத்துார் கோயில் பூக்குழி, தேரோட்டம்

சொக்கநாதன்புத்துார் கோயில் பூக்குழி, தேரோட்டம்

தளவாய்புரம்: சேத்தூர் அடுத்த சொக்கநாதன் புத்துார் முப்புடாதி அம்மன், மாரியம்மன் கோயில்களில் தேரோட்டம் மற்றும் பூக்குழி திருவிழாவில் பிறக்க கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

* சொக்கநாதன் புத்துார் மேலுார் துரைச்சாமிபுரம் புரட்டாசி பொங்கல் கடந்த அக்.6-ல் கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தினமும் மாலை இன்னிசை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வில்லுப்பாட்டு, பட்டி மன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மன் பூ இறங்கிய பின் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு பூ இறங்கி தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

* சொக்கநாதன் புத்துார் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை அடுத்து தேரோட்டம் நடைபெற்றது. 10 நாள் திருவிழாவில் முக்கிய விழாவான தேரோட்டத்தில் நேற்று காப்பு கட்டிய பக்தர்கள் தேருக்கு பின் கும்பிடு சரணம் முறையில் கீழே விழுந்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !