காந்தாரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா
ADDED :1095 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி, குப்பச்சி வலசையில் காந்தாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. 48 வது நாள் மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு கோயிலில் யாகசாலை நடந்தது. மூலவர் காந்தாரி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.