சாத்தா அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1091 days ago
பாலமேடு: பாலமேடு அருகே அரசம்பட்டி ஸ்ரீ சாத்தா அம்மன் கோயிலில் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பூஜை நடந்தது. இப்பகுதியில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராமமக்கள் பொங்கல் வைத்து அசைவு விருந்து படைத்தனர். அம்மன், சுவாமிக்கு பழ தட்டுகள் வைத்து பாரம்பரிய முறையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.