சோமலிங்க சுவாமி கோயிலில் வாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :1091 days ago
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், வாலை சக்தி அம்மன் பிரதிஷ்டை ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம், மூலவருக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.