உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம் மாத பிறப்பு : ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு காவிரியில் இருந்து புனித நீர்

துலாம் மாத பிறப்பு : ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு காவிரியில் இருந்து புனித நீர்

திருச்சி : ஐப்பசி துலாம் மாத பிறப்பை முன்னிட்டு, ஸ்ரீ ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காக மா மண்டபம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டது.

ஐப்பசி மாதத்தில் சூரியன், துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது என்பது ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவர். இன்று 18 ம் தேதி துலாம் மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு காவிரி ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் புனிதநீர் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !